நின்று கொண்ட படகு ஓட்டி அசத்தல்..ரஷியாவில் கோலாகலம்

கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், சூப்பர் ஹீரோக்கள் போன்று பல்வேறு நிறங்களில் கண்கவர் உடைகளை அணித்து படகுகளை நின்று கொண்டே ஓட்டி மக்கள் அசத்தியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆண்டுக்கு ஒரு முறை ஸ்டாண்ட் அப் பேடில் போர்டிங் போட்டி நடத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில், சனிக்கிழமை அன்று நடத்தப்பட்ட போட்டியில் ஆயிக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், சூப்பர் ஹீரோக்கள் போன்று பல்வேறு நிறங்களில் கண்கவர் உடைகளை அணிந்த மக்கள் போட்டியில் கலந்து கொண்டனர். அவர்கள் படகுகளை நின்று கொண்டே ஓட்டி நகரம் முழுவதும் சுற்றித்திருந்தனர்.

கரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் கூட்டத்தை தவிர்க்க திருவிழாவில் கலந்து கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தவர்களுக்கும் பெருந்தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கும் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் கூட்டங்களில் 75 பேருக்கு மேல் கலந்து கொள்ள கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com