உலகின் மிக புத்திசாலி மாணவியாக இந்திய-அமெரிக்க சிறுமி அறிவிப்பு

நடாஷா பெரி, 11 வயதாகும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க சிறுமி, உலகின் மிக புத்திசாலி மாணவியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உலகின் மிக புத்திசாலி மாணவியாக இந்திய-அமெரிக்க சிறுமி அறிவிப்பு
உலகின் மிக புத்திசாலி மாணவியாக இந்திய-அமெரிக்க சிறுமி அறிவிப்பு


வாஷிங்டன்: நடாஷா பெரி, 11 வயதாகும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க சிறுமி, உலகின் மிக புத்திசாலி மாணவியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எஸ்ஏடி மற்றும் ஏசிடி ஆகிய தேர்வுகளில் மாணவி நடாஷா பெரியின் திறனை அறிந்து, அமெரிக்காவின் மிக முன்னணி பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எஸ்ஏடி மற்றும் ஏசிடி தேர்வுகளை, பல கல்லூரிகள் தங்களது மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்கின்றன. பல நிறுவனங்கள் தங்களது லாபநோக்கமற்ற அமைப்புகளில் மாணவர்களுக்க ஸ்காலர்ஷிப் வழங்கவும் இந்த தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்களை எடுத்துக் கொள்கின்றன.

அமெரிக்காவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், மாணவர் சேர்க்கை பெற விண்ணப்பிப்போர் இந்த தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதி, அதில் எடுக்கும் மதிப்பெண்ணை விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கிஹயுள்ளன.

இந்த நிலையில்தான், நியூஜெர்சியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது நடாஷா பெரி, 2020- 21ஆம் ஆண்டுக்கான இளம் திறமையானவர்கள் தேடலில், உலகின் மிக புத்திசாலி மாணவி என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com