பாகிஸ்தானில் மீண்டும் 100-ஐ தொட்ட கரோனா பலி

பாகிஸ்தானில் கரோனாவுக்கு ஒரேநாளில் 100 பேர் பலி பலியாகியுள்ளனர்.  
பாகிஸ்தானில் மீண்டும் 100-ஐ தொட்ட கரோனா பலி

பாகிஸ்தானில் கரோனாவுக்கு ஒரேநாளில் 100 பேர் பலி பலியாகியுள்ளனர். 

அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த தினங்களாக கரோனா பரவலின் 4ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 4ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்ட சுனக்கமே கரோனா பரவல் அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது.

மொத்த மக்கள் தொகையில் இதுவரை 2 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,934 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,85,294ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 102 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 24,187ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக கடந்த மே 20ஆம் தேதி கரோனாவுக்கு ஒரேநாளில் அதிகபட்சமாக 100 பேர் பலியாகினர். தற்போது இரண்டரை மாதங்களுக்கு பிறகு கரோனாவுக்கு மீண்டும் ஒரேநாளில் 100 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 59,397 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com