
கோப்புப்படம்
தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என முகநூல் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.
இதையும் படிக்க | ஆப்கனில் தலிபான் ஆட்சி: அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலா?
இதையடுத்து தலிபான்களுக்கு எதிராக பெரும்பான்மையான பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தாலும், அவர்களுக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.a
இதுகுறித்து முகநூல் நிர்வாகம் வெளியிட்ட செய்தியில்,
“அமெரிக்க சட்டப்படி பயங்கரவாத அமைப்பாக தலிபான் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், எங்கள் நிறுவனத்தின் கொள்கையில்படி தலிபான்களின் கணக்குகளுக்கு தடை விதிக்கின்றோம். தலிபான்களுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை நீக்குவதுடன், தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படும் கணக்குகளும் முடக்கப்படும்.”