ஆப்கனை கைப்பற்றியுள்ள தலிபான்கள் கேளிக்கை பூங்காக்களில் குழந்தைகளை போல் விளையாடும் காணொலி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.
இதையும் படிக்க | ஆப்கனில் தலிபான் ஆட்சி: அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலா?
இந்நிலையில், காபூலில் உள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில் நுழைந்த தலிபான்கள் அங்கு குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் தங்களை மறந்து விளையாடும் காணொலி மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி செய்யும் காணொலிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.