
அதிபர் மாளிகையை கைப்பற்றிய தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப தலிபான்கள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.
இதையும் படிக்க | ஆப்கனில் தலிபான் ஆட்சி: அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலா?
இந்நிலையில் இன்று தலிபான்கள் வெளியிட்ட செய்தியில்,
ஆப்கானில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. அனைவரும் தங்களின் பணிகளுக்கு திரும்ப வேண்டும். பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் முழு நம்பிக்கையுடன் தங்கள் பணிகளை தொடரலாம் எனத் தெரிவித்துள்ளனர்.