ஆப்கானிஸ்தானின் அடுத்த அதிபர் யார்? சுவாரஸ்ய தகவல்கள்

தலிபான் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும் துணை தலைவருமான முல்லா அப்துல் கனி பராதர், ஆப்கானிஸ்தானின் அடுத்த அதிபராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தலிபான் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும் துணை தலைவருமான முல்லா அப்துல் கனி பராதர், ஆப்கானிஸ்தானின் அடுத்த அதிபராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க படைகள் வெளியேறிதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து நாடு முழுவதையும் தலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் அடுத்த அதிபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, தலிபான் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும் துணை தலைவருமான முல்லா அப்துல் கனி பராதர், ஆப்கானிஸ்தானின் அடுத்த அதிபராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு, பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட முல்லா பராதர், 2018இல் அப்போதைய அதிபர் ட்ரம்பின் உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டார். கத்தாரில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் பராதர் முக்கிய பங்காற்றுவார் என கருதிய அமெரிக்க தூதர் ஜல்மே கலீல்சாத், இந்த முடிவை எடுத்தார்.

அமெரிக்க, ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக பராதர் கத்தார் சென்று அங்கு பல மாதங்கள் இருந்தார். 

பல ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதிலும், அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட முல்லா பல முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக, 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் முல்லா முக்கிய பங்காற்றினார்.

பத்தாண்டுகளிக்கு பிறகு ஆப்கானிஸ்தான் திரும்பியுள்ள முல்லா, இரண்டாவது பெரிய நகரமான கந்தஹாரில் தனது விமானத்தை தரையிறக்கினார். அங்கு கூடியிருந்த தலிபான்களின் ஆதரவாளர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com