தலிபான் குறித்து சிறுமி எழுதிய கடிதம்: ஏஞ்சலினா ஜோலி உருக்கம்

தலிபான் குறித்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனக்கு எழுதிய கடிதத்தை ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தலிபான் குறித்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனக்கு எழுதிய கடிதத்தை ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உலகம் முழுவதும் தலிபான்கள் மேற்கொண்டுவரும் வன்முறைச் செயல்களை கண்டித்து பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்துவருகின்றனர். அந்த வரிசையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சேர்ந்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுமி ஒருவர் கைப்பட எழுதிய கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், உலகம் முழுவதும் மனித உரிமைகளுக்காக போராடுபவர்களின் குரல்களை பகிர்வதை நோக்கமாக கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். போரின் காரணமாக பெரும் பாதிப்படைந்துள்ள ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். 

இதுகுறித்து அச்ச உணர்வையும் ஆதரவற்ற நிலையையும் கடிதத்தில் வெளிப்படுத்திய சிறுமி, "20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உரிமைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் வாழ்க்கையே இருளில் மூழ்கியுள்ளது. சுதந்திரத்தை இழந்து மீண்டும் சிறைப்படுத்தப்பட்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஏஞ்சலினா ஜோலி குறிப்பிடுகையில், "சமூக வலைதளங்களில் சுதந்திரமான கருத்துகளை பகிரமுடியாத நிலையில் ஆப்கன் மக்கள் தற்போது உள்ளனர். இரட்டை கோபுர தாக்குதல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில்தான் இருந்தேன்.

அப்போது, தலிபான்களிடமிருந்து தப்பித்து வந்த அகதிகளை அங்கு கண்டேன். அச்சத்தின் காரணமாக நாட்டை விட்டு மக்கள் மீண்டும் வெளியேறுவதை கண்டால் போரமாக உள்ளது" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com