ஆப்கனில் 1.4 கோடி பேர் பட்டினியை எதிர்கொள்ளும் அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் கரோனா மற்றும் அரசியல் சூழல் காரணமாக 1.4 கோடி பேர் பசி, பட்டினியால் வாடும் நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு திட்ட இயக்கம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. மக்கள் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வரும் நிலையில் அந்நாட்டில் வசிக்கும் மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கனில் நிலவி வரும் கரோனா பரவல் மற்றும் அரசியல் சூழல் காரணமாக அந்நாட்டு மக்கள் பேரழிவுக்கு தள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் மூன்றில் ஒருவர் பட்டினியை எதிர்கொள்வதாகவும், சுமார் 1.4 கோடி பேர் பசியால் வாடும் சுழல் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அடிப்படைப் பொருள்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதால் அவற்றை பெற முடியாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் எனத் தெரிவித்துள்ள நிலையில் இருப்பில் உள்ள கோதுமை அக்டோபர் மாதம் வரைக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்கள் இரான், பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் தஞ்சமடைந்துள்ளதால் அந்த நாடுகளுக்கு உடனடியாக நிதியாதாரங்களை உறுதிப்படுத்த ஐநா வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com