

காபூல் விமான நிலையத்தில் வியாழக்கிழமை தற்கொலைப்படை தாக்குதல் நடந்த நிலையில் பலி எண்ணிக்கை 108ஆக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை குண்டுவெடிப்பு நடந்தது. காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரைவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிக்க | காபூல் தாக்குதலில் தலிபான்கள் 28 பேர் பலி
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் பலியானர்களின் எண்ணிக்கை 108ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தாக்குதலில் 95 பேர் ஆப்கானியர்களும், 13 அமெரிக்க படையினரும் பலியாகியுள்ளனர். மேலும் இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
முன்னதாக ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.