ஆப்கனைவிட்டு வெளியேறுபவர்களை தலிபான்கள் தடுக்கக்கூடாது: 90 நாடுகள் கூட்டறிக்கை

ஆப்கானிஸ்தானில்  வசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும்  வெளியேற விரும்பும் ஆப்கானியர்களுக்கு தலிபான்கள் எந்தவிதத் தடையும் விதிக்கக் கூடாது என்று 90 நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில்  வசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் அந்நாட்டை விட்டு வெளியேற விரும்பும் ஆப்கானியர்களுக்கு தலிபான்கள் எந்தவிதத் தடையும் விதிக்கக் கூடாது என்று 90 நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள், ஆப்கானிஸ்தானை முழுவதுமாக  கைப்பற்றியுள்ளனர். மேலும் தலிபான்கள், அங்கு ஆட்சியமைப்பதற்கான பல்வேறு பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரங்களை காலி செய்த பல்வேறு நாடுகள் தங்களுடைய நாட்டினரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. தலிபான்களின் ஆட்சியை அடுத்து ஆப்கன் மக்களும் பலர் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் அங்கு மோசமான சூழ்நிலையை ஏறப்டுத்தியுள்ளது. 

முன்னதாக, ஆப்கன் மக்கள் வெளியேறக்கூடாது என்று தலிபான்கள் தெரிவித்த நிலையில், உலக நாடுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, ஆப்கனில் இருந்து வெளியேற நினைப்பவர்களை தடுக்க மாட்டோம் என்று தலிபான்கள் கூறினர். 

இந்நிலையில் இதுதொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட 90 நாடுகள் சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. 

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப்பவர்களைத் தடுக்க மாட்டோம் என்று தலிபான்கள் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்ற வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில்  வசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் அந்நாட்டை விட்டு வெளியேற விரும்பும் ஆப்கானியர்களுக்கு தலிபான்கள் எந்தவிதத் தடையும் விதிக்கக் கூடாது என்று வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com