பிரான்ஸிலும் 'ஒமைக்ரான்' முதல் பாதிப்பு உறுதியானது!

பிரான்ஸ் நாட்டில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
பிரான்ஸிலும் 'ஒமைக்ரான்' முதல் பாதிப்பு உறுதியானது!

பிரான்ஸ் நாட்டில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

உருமாற்றம் அடைந்த புதிய 'ஒமைக்ரான்' வகை கரோனா முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சவூதி அரேபியா, நைஜீரியா உள்ளிட்ட 23 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

மற்றவகை கரோனா வைரஸைவிட இது அதிக பாதிப்பு உடையது என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் பயணக் கட்டுப்பாடு, மருத்துவப் பரிசோதனை என பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

அமெரிக்காவில் நேற்று முதல்முறையாக ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இன்று இந்தியாவிலும் இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து பிரான்ஸ் நாட்டிலும் பாரிஸ் மாகாணப் பகுதியில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் நைஜீரியாவில் இருந்து வந்தவர் என்றும் கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com