சுவிட்சர்லாந்து: தற்கொலை செய்து கொள்ள புதிய எந்திரம், அரசு அனுமதி

சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்வதற்கான புதிய எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பல நாடுகளில் தற்கொலை எண்ணம் இருப்பவர்களுக்கு அரசே முன்வந்து ஆலோசனை வழங்கி வரும் சூழலில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான புதிய எந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி அளித்திருக்கிறது.

அந்நாட்டில் கருணைக் கொலை நடைமுறையில் இருப்பதால் பல கருணைக் கொலைகளை அது சார்ந்து அமைப்புகள் நிகழ்த்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ’டாக்டர் டெத்’ என அழைக்கப்படும் மருத்துவர் பிலிப் நிட்ச்கே என்பவர் வலியே ஏற்படாமல் தற்கொலை செய்து கொள்ளும் எந்திரம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.

தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறவர்கள் அந்த எந்திரத்தில் படுத்துக்கொண்டால் ஒரு நிமிடத்தில் உயிர் பிரிந்து விடுமாம்.

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு மட்டும் 1,300 கருணைக் கொலைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com