
கோப்புப்படம்
அமெரிக்காவின் மக்கள் தொகை அதிகமுள்ள மாகாணமான நியூ ஜெர்சியில் கரோனா காரணமாக மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 60 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
3,604 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதே காலக்கட்டத்தில், கடந்தாண்டு, 3,706 பேர் சிகிச்சை பெற்றனர். ஆனால், அப்போது தடுப்பூசி செலுத்திப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில், கரோனா காரணமாக 38 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளது. அதாவது, 27,975 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் பில் மர்பி விதித்த கட்டுப்பாடுகளை காட்டிலும் மேயர்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
மாகாணத்தின் பெரிய நகரமான நெவார்க்கின் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள தடுப்பூசி சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ஆம் தேதி முதல், உணவகங்கள் மற்றும் இசை கச்சேரி நடைபெறும் இடங்களுக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழ் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தடையை மீறி ஈரான் ராக்கெட் சோதனை
அதேபோல, மன்ஹாட்டன் ஹட்சன் ஆறுக்கு அப்பால் உள்ள ஹோபோகென் நகரில் பொது இடங்களுக்கு செல்வதற்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் இது அமலுக்கு வந்துள்ளது. அதேபோல், உணவகங்களில் உள்ள பணியாளர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் உணவகங்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டது.