

ரஷியாவில் கரோனா தொற்றுக்கு ஒரேநாளில் 480 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
புதிதாக 12,953 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 41,51,984 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 1,623 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
ரஷியாவில் கரோனா தொற்றுக்கு மேலும் 480 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 82,876 ஆக அதிகரித்துள்ளது.
ஒரேநாளில் 17,484 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், தற்போதுவரை 36,97,433 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.