
கரோனா விதிகளை மீறியதால் பிரிட்டன் ஊடகவியலாளர் கேட்டி ஹாப்கின்ஸை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பவுள்ளது.
பிக் பிரதர் என்ற புகழ்பெற்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியை செவன் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் நடத்திவருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரிட்டன் ஊடகவியலாளர் கேட்டி ஹாப்கின்ஸ் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு சென்றுள்ளார்.
விடுதியில் தனிமைப்படுத்தி கொண்டபோது உணவளிக்க சிலர் வரும்போது, தான் ஆடையின்றி மாஸ்க் அணியாமல் இருந்ததாக ஹாப்கின்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் கிண்டலாக பேசியிருந்தார்.
இந்நிலையில், கரோனா விதிகளை மீறியதால் ஹாப்கின்யை பிரிட்டனுக்கு திருப்பி அனுப்புவதாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் அனைவரும் விடுதியில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், மாஸ்க் அணிந்து 30 வினாடிகளுக்கு பிறகுதான் உணவு வாங்கிக்கொள்ள வேண்டும்.