மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆப்கானிஸ்தான் : ராணுவத் தாக்குதலில் 28 தலிபான்கள் பலி 

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் பல்வேறு வழிகளில் அரசு அவர்களை ஒடுக்க தாக்குதல்களை தொடர்ந்து வருகிறார்கள்

News image
ஆப்கானிஸ்தான் : ராணுவத் தாக்குதலில் 28 தலிபான்கள் பலி 
Updated On :27 ஜூலை 2021, 9:53 am

DIN

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் பல்வேறு வழிகளில் அரசு அவர்களை ஒடுக்க தாக்குதல்களை தொடர்ந்து வருகிறார்கள். மேலும் தலிபான்கள் ஒவ்வொரு பகுதியாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கொண்டிருப்பதால் அவற்றை முறியடிக்கும் முயற்சிகளிலும் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் தாலுகான் பகுதியைக் கைப்பற்ற தலிபான்கள் ரகசியத் தாக்குதலில் ஈடுபட இருக்கிறார்கள் என்கிற தகவலை அறிந்த ராணுவம் வான் வழித் தாக்குதலைக் தொடுத்தனர்.

இத்தாக்குதலில் தலிபான்கள் 28 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாகார் மாகாணத்தின் 16 மாவட்டங்களையும் தலிபான் கட்டுப்படுத்துவதாகவும், காபூலுக்கு வடக்கே 245 கி.மீ தொலைவில் உள்ள தாலுகான் நகரத்தைக் கைப்பற்ற கடந்த ஒரு மாதமாக போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.

நேற்று நடந்த தாக்குதலிலும் தலிபான்கள் 9 பேர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர்.

தலிபான் தரப்பிலிருந்து அளித்த தகவலில் ,  பதாக்சன் மாகாணத்தில் உள்ள 27 மாவட்டங்களில் 19 மாவட்டம் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.