சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவ தொடங்கிய கரோனாவை, பெருந்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தியதன் மூலம் அந்நாடு கட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்நிலையில், சீனத்தில் உள்ள ஐந்து மாகாணங்களில் தற்போது கரோனா மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. பல மாதங்களில் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு, சீனத்தின் வூஹானில் பரவிய கரோனா உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியது. அதனை கட்டுப்படுத்து முடியாமல் உலக நாடுகள் திணறினாலும், தாங்கள் அதை கட்டுப்படுத்திவிட்டதாக சீனா அறிவித்தது.
இதற்கிடையே, ஜூலை 20ஆம் தேதி நாஞ்சிங் விமான நிலையத்தில் ஒன்பது பேருக்கு டெல்டா வகை கரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து, நகரில் மொத்தமாக 184 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நாடு முழவதும் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்துபட்சம் 206 பேர் நாஞ்சிங் விமான நிலையத்திலிருந்து பரவிய டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தடுப்பு நடவடிக்கையாக ஜியாங்சு மாகாணத்தில் நூற்றுக்கணக்கான பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.