பேரழிவின் விளிம்பில் இந்தோனேசியா: எச்சரிக்கும் செஞ்சிலுவை சங்கம்

கரோனா தொற்று பரவலுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தோனேசியா பேரழிவின் விளிம்பில் இருப்பதாக செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனா வைரஸ் பாதிப்பானது இந்தோனேசியாவில் உச்சம் பெற்று வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கையால் கூடுதல் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா பேரழிவின் விளிம்பில் இந்தோனேசியா இருப்பதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. 

டெல்டா வகை கரோனா பரவல் அதிகரித்துவருவதால் கூடுதல் படுக்கைகளையும், ஆக்சிஜன் வசதியையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் எச்சரித்துள்ளது. தற்போதைய நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஏறக்குறைய படுக்கைகள் நிரம்பி விட்ட நிலையில் அரசு இதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20,600 புதிய தொற்று பாதிப்புகளும், 400க்கும் அதிகமான இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 21 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com