ஆஸ்திரியாவில் மீண்டும் அமலாகும் பொதுமுடக்கம்

கரோனா நான்காம் அலை பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஆஸ்திரியாவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் மீண்டும் அமலாகும் பொதுமுடக்கம்
ஆஸ்திரியாவில் மீண்டும் அமலாகும் பொதுமுடக்கம்

கரோனா நான்காம் அலை பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஆஸ்திரியாவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா கட்டுக்குள் வந்தாலும் ஒரு சில நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அந்நாடுகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆஸ்திரியாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 22ஆம் தேதி முதல் அமலாகும் பொதுமுடக்கமானது 10 நாள்கள் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் உணவகங்களை மூடவும், பொதுநிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தும் ஆஸ்திரியா ஆஸ்திரிய அதிபர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

ஆஸ்திரியாவில் இதுவரை 1,027,274 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com