18 மாதங்களுக்கு பிறகு எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஆஸ்திரேலியா

முதற்கட்டமாக, நிரந்தர குடியரிமை வைத்துள்ள மக்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படவுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

18 மாதங்களாக, வெளிநாடுகளுக்கு செல்ல ஆஸ்திரேலிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அடுத்த மாதல் முதல் திரும்பப்பெறப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். கரோனா காரணமாக உலகம் முழுவதும் இப்படிப்பட்ட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பல்வேறு நாடுகள் தளர்வுகளை அறிவித்துவருகிறது.

இதுகுறித்து மோரிசன் மேலும் கூறுகையில், "குடிமக்களும் நிரந்தர குடியுரிமை வைத்துள்ளவர்களும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படும் அதே சமயத்தில், ஆஸ்திரேலியாவில் உள்ள எட்டு மாநிலங்களில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது ஏற்கனவே அமலில் உள்ளது. மற்ற பகுதிகளை காட்டிலும் சில பகுதிகள் விரைவாகவே திறந்துவிடப்படும்" என்றார்.

முதற்கட்டமாக, குடிமக்களும் நிரந்தர குடியரிமை வைத்துள்ள மக்களும் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படவுள்ளனர். அதேபோல், வெளிநாட்டவர் ஆஸ்திரேலிய நாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆஸ்திரேலிய மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை திருப்பி தரும் நேரம் இது. பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை காப்பாற்றியுள்ளோம். இந்த நாட்டில் ஒரு காலத்தில் இருந்த வாழ்ந்த வாழ்க்கையை திருப்பி தருவதை உறுதி செய்ய அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். 

நவம்பர் மாதம் முதல் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளும் முறை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறேன். இதுகுறித்த விதிமுறைகளை அந்தந்த மாநிலங்களே வகுக்கும்" என்றார். முன்னதாக, கடந்தாண்டு மார்ச் மாதம், சர்வதேச எல்லைகள் மூடப்பட்டதை மோரிசன் கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போதிலிருந்து, மனிதாபிமான அடிப்படையில் ஒரு சில முக்கிய காரணங்களுக்கு மட்டுமே ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற அனுமதி வழங்கப்பட்டுவந்தது. 

அதேபோல், வெளிநாட்டிலிருந்து வரும் ஆஸ்திரேலியர்கள், நிரந்தர குடியுரிமை வைத்துள்ளவர்கள், விடுதியில் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். விடுதியில் தங்கும் செலவை அவர்களே ஏற்பதும் கட்டாயமாக்கப்பட்டது. மற்றபடி, வணிக நோக்கங்களுக்காகவும் ஹாலிவுட் படமெடுக்க மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com