கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியது ஆஸ்திரேலியா!

இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. 
கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியது ஆஸ்திரேலியா!

இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்துள்ளது. 

உலக நாடுகளில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளும் தடுப்பூசி தயாரித்து மக்களுக்காக விநியோகித்து வருகின்றன. இதில், ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்லும்போது, உலக சுகாதார அமைப்பின் அனுமதி பெற்ற தடுப்பூசிகள் உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அந்தந்த நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன. 

இந்நிலையில், இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்கள் ஆஸ்திரேலியா வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவால் தயாரிக்கப்பட்ட 'சினோவாக்' தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா, மாடர்னா மற்றும் ஜான்சன் தடுப்பூசிகளுக்கு ஆஸ்திரேலியா ஏற்கெனவே   அங்கீகாரம் வழங்கியுள்ளது. கரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள் சர்வதேச நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், உள்நாட்டு அளவிலும் பல தளர்வுகளை அறிவித்து அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். 80% தடுப்பூசி செலுத்திய மாநிலங்களுக்கு  ஆஸ்திரேலிய எல்லைகள் திறக்கப்படும். வணிக பயணத்திற்காக விமான சேவை மீண்டும் தொடங்கப்படும். நியூ சவுத் வேல்ஸ் பகுதிக்கு வருபவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com