
வடகொரியா கடந்த ஒரே மாதத்தில் 4 ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது.
வடகொரியா நாடானது அமெரிக்க அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதிநவீன ஆயதங்களைத் தயாரித்து வருகிறது. ஏவுகணைகள், ரேடார் போன்றவற்றின் மூலம் போர் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் வடகொரியா செயல்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | 18 மாதங்களுக்கு பிறகு எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஆஸ்திரேலியா
இந்நிலையில் வியாழக்கிழமை ஏவுகணையை இடைமறித்து தாக்கும் வகையிலான அதிநவீன ஏவுகணையை சோதித்துள்ளது. ஏவுகணை சோதனை குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த மாதத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், அணுசக்திதிறன் கொண்ட ஏவுகணையையும் வடகொரியா சோதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இலங்கையில் தளர்த்தப்பட்ட பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள்
சர்வதேச அமைப்புகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் உலக அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.