2021 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று (அக்.5, திங்கள்கிழமை) முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவின் ஸ்க்யூரா மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ பரிசி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ஸ்க்யூரா மனாபே மற்றும் கிளாஸ் ஹசில்மேன் ஆகிய இருவருக்கும் பூமியின் காலநிலையில் இயற்பியல் மாதிரிக்காகவும் புவி வெப்பமடைதலின் மாறுபாட்டை அளவிட்டு நம்பத்தகுந்ததாக கணித்ததற்கும் வழங்கப்பட்டது.
ஜார்ஜியோ பரிசிக்கு, உடல்கோளாறுகள் மற்றும் ஏற்ற, இறக்கங்களின் இடைவெளியைக் கண்டறிந்ததற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மருத்துவம்: அமெரிக்க விஞ்ஞானிகள் இருவருக்கு நோபல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உணவில் தினமும் எவ்வளவு உப்பு சேர்க்கலாம்?

300 ஆன்லைன் சூதாட்ட தளங்கள் முடக்கம்!

குடியரசுத்தலைவர் ஆட்சி திணிப்பு! மக்களின் குடியுரிமையைப் பறிக்க பாஜக திட்டம்! - மமதா

நியூசிலாந்து வீரர்களைப் பாராட்டிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர்!
வீடியோக்கள்

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

