ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியல்; 25 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெறாத டிரம்ப் 

ஓராண்டுக்கு முன்பிருந்த அதே சொத்து மதிப்பை டிரம்ப் கொண்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்

25 ஆண்டுகளுக்கு பிறகு, 400 பணக்காரர்கள் கொண்ட பட்டியிலிலிருந்து முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நீக்கி ஃபோர்ப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்பிருந்த அதே சொத்து மதிப்பை டிரம்ப் கொண்டுள்ளதாகவும் ஆனால், கரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து அவரின் சொத்து மதிப்பு 600 மில்லியன் டாலர்கள் குறைந்துள்ளதாகவும் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

டிரம்பின் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணிக்கிடப்பட்டுள்ளது. 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைவாக உள்ளதால் அவரால் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற முடியவில்லை. 

இதுகுறித்து நாளிதழ் வெளியிட்ட செய்தியில், "அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அவருக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. தேர்தல் முடிந்தவுடன், ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்றுவிடுமாறு அலுவலர்கள் அவரை வற்புறுத்தியுள்ளார். இதன் மூலம் அவரால் மியூச்சுவல் ஃபண்ட்டில் மீண்டும் முதலீடு செய்திருக்க முடியும். அதேபோல், அதிபர் பதவியில் இருந்து கொண்டே நிறுவனத்தை நடத்தியிருக்கலாம்.

ஆனால், அவர் சொத்துகளை விற்கவில்லை. கடனை எல்லாம் கழித்துவிட்டு பார்த்தால், அந்த சமயத்தில் அதன் மதிப்பு 3.5 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில், டிரம்ப் யாரையாவது குறை கூற வேண்டு எனில், அவரில் இருந்து தான் தொடங்க வேண்டும். 

வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கு முன்பு, தன்னால் அரசையும் தொழிலையும் ஒரே சமயத்தில் நடத்தி விட முடியும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். "நான் விரும்பினால் என்னால் அதை செய்ய முடியும். என்னால் மட்டுமே அதைச் செய்ய முடியும்" என டிரம்ப் குறிப்பிடத்தாக ஃபோர்ப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com