சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து டெக்ஸாஸுக்கு இடமாறும் உலகின் முன்னணி நிறுவனம்

"எங்களின் தலைமையகத்தை டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகருக்கு இடம்மாற்றவிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்" என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைமையகத்தை சிலிக்கான் வேலியிலிருந்து டெக்ஸாஸ் மாகாணத்திற்கு மாற்றவிருக்கிறோம் என அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அங்கு புதிதாக வாகன தயாரிப்பு தொழிற்சாலை கட்டப்பட்டுவருகிறது.

செவ்வாய்கிழமை நடைபெற்ற பங்குதாரர்களின் ஆண்டு கூட்டத்தில் பேசிய அவர், "எங்களின் தலைமையகத்தை டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகருக்கு இடம்மாற்றவிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இருப்பினும், நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கலிபோர்னியாவிலும் எங்கள் நிறுவனத்தை விரிவாக்கம் செய்யவிருக்கிறோம்.

விற்பனை தீவிரமாக அதிகரித்து வருகிறது, மேலும் கணினி சிப்புகள் மற்றும் பிற உபகரணங்களின் பற்றாக்குறை இருந்தபோதிலும் நிறுவனம் விநியோகங்களை அதிகரித்துள்ளது. டெஸ்லா கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள தனது ஆலையில் உற்பத்தியை சுமார் 50 சதவீதம் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், ஆலையின் வரம்பு காரணமாக உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் தொழிலாளர்களுக்கான செலவு அதிகமாக உள்ளது. செலவுகளை சமாளிக்க முடியாமல் தொழிலாளர்கள் தவித்துவருகின்றனர். நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது" என்றார்.

கலிபோர்னியா உள்ள ஒழுங்காற்று நிறுவனங்களுடன் மஸ்க் மோதல் போக்கை கடைபிடித்துவருகிறார். அங்கு வருமான வரி அதிகமுள்ளதால், குறைந்த வருமான வரி மற்றும் ஒழுங்காற்று விதிகளில் தளர்வுகளை அளிக்கக் கூடிய இடத்தை தேடி மஸக் போல பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com