ஸ்பெயினில் கட்டுக்குள் வந்த எரிமலை வெடிப்பு: தளர்த்தப்பட்டது ஊரடங்கு

ஸ்பெயினின் கேனரி தீவில் உள்ள எரிமலை தீப்பிழம்புகள் கட்டுக்குள் வந்த நிலையில் ஊரடங்கைத் தளர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கேனரி தீவில் வெடித்த எரிமலை
கேனரி தீவில் வெடித்த எரிமலை

ஸ்பெயினின் கேனரி தீவில் உள்ள எரிமலை தீப்பிழம்புகள் கட்டுக்குள் வந்த நிலையில் ஊரடங்கைத் தளர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஸ்பெயினில் உள்ள லா பால்மாவின் கேனரி தீவின் தெற்கே உள்ளது டெனிகுவியா எரிமலை. அவ்வப்போது இந்த எரிமலையைச் சுற்றியுள்ள கும்ப்ரே விஜா தேசியப் பூங்கா பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம். நிலநடுக்க அச்சுறுத்தலால் எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கும்ப்ரே விஜா எரிமலையில் தீப்பிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக எரிமலையிலிருந்து லார்வா குழம்புகள் கசியத் தொடங்கின. இதனால் அப்பகுதியில் புகைமண்டலம் சூழ்ந்தது.

செப்டம்பர் 19 ஆம் தேதி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 600 ஹெக்டேர் பரப்பளவில் தீப்பிழம்புகளும் லார்வாக்களும் சூழ்ந்தன.  மேலும் சுற்றுவட்டாரத்தில் இருந்த குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளை லார்வாக்கள் சூழ்ந்து அழித்தன.

எரிமலை வெடிப்பு காரணமாக வளிமண்டலத்தின் அதிகப்படியான புகை மண்டலம் சூழ்ந்ததால் மக்கள் சுவாசிக்க ஏதுவாக காற்றின் தரம் இல்லாததாக அறிவிக்கப்பட்டது. அதன்காரணமாக ஊரடங்கை அறிவித்து அம்மாகாண அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் லாபால்மா பகுதியைச் சுற்றி ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் மக்கள் சுவாசிக்கத்தக்க வகையில் காற்றின் தரம் மேம்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரலாம் என ஊரடங்கைத் தளர்த்தி அறிவித்துள்ளனர்.

முன்னதாக, கும்ப்ரே வீஜா எரிமலையைச் சுற்றி கடந்த மாதத்தில் மட்டும் 25,000க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் கண்டறியப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com