
சுந்தர் பிச்சை
பெருந்தொற்று காரணமாக வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை குகூள் அடுத்தாண்டு வரை நீட்டித்துள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாக வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை குகூள் அடுத்தாண்டு வரை நீட்டித்துள்ளது. இருப்பினும், உலகம் முழுவதும் உள்ள கூகுள் பணியாளர்கள் தாங்களாக விருப்பப்பட்டுக் கூட அலுவலகத்திற்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது ஜனவரி 10ஆம் தேதி வரை தொடரும் என்றும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு எப்போதிலிருந்து வரலாம் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் உள்ளூர் அலுவலகத்திற்கு வழங்கியுள்ளதாகவும் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உலகின் பல்வேறு பகுதிகளில் பல அலுவலகங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆயிரக்கணக்கான குகூள் பணியாளர்கள் தாங்களாக அலுவலகத்திற்கு மீண்டும் வருவதை வரவேற்கிறோம்.
நாம் நினைத்தை விட நம்முடைய பயணம் சவால் நிறைந்ததாகவும் நீண்டதாகவும் இருக்கும் என நினைக்கிறேன். இருப்பினும், இதை அனைவரும் ஒன்றிணைந்து கடப்போம் என நம்பிக்கையுடன் தெரிவித்து கொள்கிறேன். அலுவலகத்திற்கு வர விருப்பம் தெரிவிப்பவர்கள் 30 நாள்களுக்கு முன்பு தெரிவிக்க வேண்டும். அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அவர்களுக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும்.
இதையும் படிக்க | இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் முயற்சியில் தலிபான்கள்
பேஸ்புக், குகூள் உள்ளிட்ட நிறுவனங்கள் அலுவலகத்திலிருந்து பணிபுரியும் முறையை அமல்படுத்த திட்டமிட்டருந்தது. ஆனால், கரோனா காரணமாக இத்திட்டம் தாமதமாகிவருகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...