கோப்புப்படம்
கோப்புப்படம்

சீனாவுடன் கைக்கோர்க்கும் தலிபான்கள்

சீனாவின் பட்டுப் பாதை திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

சீனாவை மிக முக்கிய கூட்டு நாடாக விவரித்துள்ள தலிபான் செய்தித் தொடர்பாளர், ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டமைப்பதில் சீனாவின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டு காலப் போரின் விளைவாக ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் அகலபாதாளத்திற்கு சென்றுள்ளது.

இதுகுறித்து தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இத்தாலி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "சீனா எங்களது மிக முக்கிய கூட்டு நாடாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்யவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் அவர்கள் தயாராக உள்ளனர். எங்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை அளித்துவருகின்றனர். 

எங்கள் நாட்டில் செழிப்பு மிக்க செப்பு சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியோடு இதனை நவீனப்படுத்தி இயக்கவுள்ளோம். உலகம் முழுவதும் உள்ள சந்தைகளுக்கு சீனாதான் எங்களுக்கு வாயிலாக உள்ளது" என்றார். தலிபான்களுக்கு ஆதரவான கருத்துகளை சீனா வெளியிட்டுவரும் நிலையில், தலிபான்களின் இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

துறைமுகங்கள், ரயில்வே, சாலைகள் மற்றும் தொழில்துறை பூங்காக்களின் மூலமாக ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய நாடுகளுடன் சீனாவை இணைப்பதே பட்டுப் பாதை திட்டம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com