
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை கிழக்கு கடற்கரைப் பகுதியில் சோதித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
வடகொரிய நாடானது அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அமைப்புகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.
இதையும் படிக்க | அரசியல் களமான மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சி
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையிலான இரண்டு ஏவுகணைகளை அந்நாடு சோதித்துள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனை இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 800 கி.மீ. தூரத்தில் இருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.
இந்த ஏவுகணை சோதனைகள் அணுசக்தி நடவடிக்கைகளைத் தடுக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் முடிவுகளை மீறுபவை என்பது குறிப்பிடத்தக்கவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.