
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டீன் ட்ரூடோ மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.
கனடாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அவா் ஆட்சியமைத்திருந்தார்.
கரோனா தொற்று பரவல் சூழலை சிறப்பாக கையாண்டதாக கனடா மக்களின் பாராட்டைப் பெற்ற ஜஸ்டீன் ட்ரூடோ அதனை தனக்கு சாதமாக்கிக் கொள்ள குறுகிய காலத்தில் தேர்தலை அறிவித்தார்.
இதையும் படிக்க | ஆப்கனில் பெண்களுக்கு கல்வி எப்போது? தலிபான்கள் பதில்
கனடாவில் 2023ஆம் ஆண்டு நடைபெற இருந்த தேர்தலான முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் திங்கள்கிழமை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.
ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கும், கன்சா்வேடிவ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவி வந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராகவும், கன்சா்வேடிவ் கட்சி சாா்பில் பிரதமா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எரின் ஓ டூலிக்கும் சாதகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிக்க | ரஷிய நாடாளுமன்றத் தோ்தல் பெரும்பான்மையை தக்கவைக்கிறது புதின் கட்சி
இந்நிலையில் தேர்தலில் எதிர்பார்த்த அளவு ஆதரவைப் பெறாத ஜஸ்டீன் ட்ரூடோ மொத்தம் உள்ள 338 இடங்களில் 156 இடங்களை மட்டுமே பெற்றார். கன்சா்வேடிவ் கட்சி 121 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. பெரும்பான்மைக்குத் தேவையான 170 இடங்களில் எஞ்சிய இடங்களைப் பெற ஜஸ்டீன் ட்ரூடோ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.