குவாட் உச்சிமாநாட்டில் இன்று பேசுகிறார் பிரதமர் மோடி

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் இன்று (செப்-24) பிரதமர் மோடி பேச இருக்கிறார்.
மோடியுடன் கமலா ஹாரிஸ் சந்திப்பு
மோடியுடன் கமலா ஹாரிஸ் சந்திப்பு

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் இன்று (செப்-24) பிரதமர் மோடி பேச இருக்கிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து ஏழாவது முறையாக மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மோடி , நேற்று (செப்-23) அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இருவரையும் சந்தித்து உரையாற்றினார்.

தற்போது இன்று (செப்-24) இந்திய நேரம் இரவு 11.30 மணிக்கு வாஷிங்டனில் நடைபெறவுள்ள குவாட் கூட்டத்தில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து ஆப்கன் விவகாரம் அதன் தாக்கங்கள், சீனாவின் ஆதிக்கம், தீவிரவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், அமெரிக்க - இந்திய கூட்டணியை மேலும் விரிவுப்படுத்துவது எப்படி போன்ற வி்வகாரங்களைப் பற்றி பேச இருக்கிறார். 

கரோனா தொற்றுக்குப் பின் நடைபெறும் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மோடியின் உரை பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com