தடுப்பூசிக்கு எதிரான கருத்துகள் யூடியூபில் நீக்கம்

உலகம் முழுவதும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தாலும் பல நாடுகளில் அதனை எதிர்த்தும் வருகிறார்கள்.
தடுப்பூசிக்கு எதிரான கருத்துகள் யூடியூபில் நீக்கம்
தடுப்பூசிக்கு எதிரான கருத்துகள் யூடியூபில் நீக்கம்

உலகம் முழுவதும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தாலும் பல நாடுகளில் அதனை எதிர்த்தும் வருகிறார்கள்.

முக்கியமாக அமெரிக்காவில் தடுப்பூசிகளுக்கு எதிராக நிறைய குரல்கள் எழுந்து வருவதைத் தொடர்ந்து யூடியூப் தளம் புதிய நடவடிக்கையை தொடங்க இருக்கிறது.

அதன்படி 10 புதிய கரோனா கொள்கையைக் கையாள இருக்கிறது யூடியூப். இதில் முதன்மையாக யாராவது தடுப்பூசிக்கு எதிராக கானொலியை வெளியிட்டால் அந்த விடியோ உடனடியாக நீக்கப்படும் என யூடியூப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன் அமெரிக்கவைச் சேர்ந்தவர்களின் யூடியூப் பக்கத்தில் தடுப்பூசிகளைப் பற்றிய தவறான கருத்துகளைப் பரப்பியதால் அந்த பக்கத்தை நிர்வாகம் முடக்கியிருக்கிறது.

இதுகுறித்து யூடியூப் நிறுவனத்தின் துணை தலைவர் மாட் ஹாப்ரின் ‘ மக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நேரத்தில் அதைப் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் பரவினால் உடனடியாக சேனல் முடக்கப்படும். அப்படி சில விடியோக்களை யூடியூப் நிர்வாகம் தடை செய்திருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

குறிப்பாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் மாரடைப்பு , புற்றுநோய் , நீரழிவு போன்ற நோய்கள் வரும் என தவறாக கூறப்படும் தகவல்கள் மற்றும் கரோனா தடுப்பூசிக்கு பதிலாக அங்கீகரிக்கப்படாத மருந்துகளைப் பயன்படுத்தத் தூண்டிய 1,30,000  சர்ச்சைக்குரிய விடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியிருக்கிறது. 

இதனால் இனி ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்திலும் தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துகளுக்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com