

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச இல்லம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டம் ஒரு பயங்கரவாதச் செயல் என்று அந்த நாட்டு அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து அதிபா் மாளிகை செய்தித் தொடா்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிபா் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், திடீரென வன்முறையில் ஈடுபட்டனா். அவா்களில் பலா் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் நடத்திய வன்முறைப் போராட்டம் பயங்கரவாதச் செயலுக்கு ஒப்பானதாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு பொறுப்பேற்று கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி அவரது இல்லம் அருகே வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
அப்போது, அதிபரின் இல்லம் அருகே வைக்கப்பட்டிருந்த தடையை மீறி சென்ற போராட்டக்காரா்களை போலீஸாா் கண்ணீா்ப் புகை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைத்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.