கலகத்தின் காரணத்தைத்தான் விசாரித்தறிய வேண்டும்: கொழும்பு பேராயர்

அதிபர் கோத்தபய ராஜபட்சவின்  இல்லத்தின் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கான காரணத்தை அறியவே விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கர்தினால் மால்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் கோத்தபய ராஜபட்சவின்  இல்லத்தின் அருகே நடைபெற்ற போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட பேருந்து
அதிபர் கோத்தபய ராஜபட்சவின்  இல்லத்தின் அருகே நடைபெற்ற போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட பேருந்து
Updated on
1 min read

இலங்கையில் தலைநகர் கொழும்பில்  அதிபர் கோத்தபய ராஜபட்சவின்  இல்லத்தின் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கான காரணத்தை அறியவே விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கர்தினால் மால்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இறுகிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கிளர்ந்தெழுந்து வீதிகளில் போராட்டம் நடத்திவருகின்றனர். மார்ச் 31 இரவு, மிரிகானாவில் அதிபர் இல்லத்தின் முன் போராட்டக்காரர்கள் திரண்டு தீவைப்பிலும் இறங்கினர்.

இந்த நிலையில், இதுதொடர்பான விசாரணைகளில் பலரும் கைது செய்யப்பட்டுவருகின்றனர். இந்த சம்பவத்தைப் பயங்கரவாதம் என்பதாக ஆளும்கட்சி ஆதரவாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, ஏப். 1 இரவில் இலங்கையில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மிரிகானா போராட்ட வன்முறை  பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள கொழும்பு பேராயர் மால்கம் ரஞ்சித், இந்தப் போராட்டத்தில் பங்குபெற்றவர்களைப் பற்றி விசாரிப்பதில் பயனில்லை. இந்த நிலைக்குக் காரணமானவர்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் எதற்காக வெகுண்டெழுந்து வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள் என்பதை அறிந்துகொள்வதுடன், அரசியல் கட்சித் தலைவர்களும்கூட தற்போதைய பிரச்னை குறித்துத் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பேராயர் மால்கம் ரஞ்சித் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com