கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிரிட்டன்: 13-இல் ஒருவருக்கு கரோனா பாதிப்பு

பிரிட்டனின் 13 பேரில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது வாராந்திர புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

News image
Updated On :2 ஏப்ரல் 2022, 5:46 pm

DIN

பிரிட்டனின் 13 பேரில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது வாராந்திர புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், வாராந்திர கரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், பிரிட்டன் முழுவதும் 49 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது, இதுவரை இல்லாத வாராந்திர கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும்.

அதற்கு முந்தைய வாரத்தில், 43 லட்சம் பேருக்கு மட்டுமே புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வேகமாகப் பரவும் ஒமைக்ரான் வகை கரோனாவும், அதன் துணைப் பிரிவான பிஏ.2 வகையும்தான் நாட்டில் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கரோனா பாதிப்பு மட்டுமன்றி, அந்த நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோா் மற்றும் மரணமடைந்தவா்களின் எண்ணிக்கையும் கடந்த வாரம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.