சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு: இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாக். பிரதமர் (கோப்புப்படம்)
பாக். பிரதமர் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் எனக் குற்றம்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன. இந்தத் தீர்மானத்தின் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

காலை 11.30 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இஸ்லாமாபாத் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இருசக்கர வாகனத்தில் ஒருவருக்கு மேல் பயணிக்க அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

341 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற கீழவையில் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர். அவருக்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 23 உறுப்பினர்கள் ஆதரவளித்து வந்தனர். கூட்டணிக் கட்சிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ள நிலையில், வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு கவிழ்வது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com