
கோப்புப்படம்
பெய்ஜிங்: சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
சீனாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்களை அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சீனாவிலிருந்து உலகம் முழுவதும் 225 நாடுகளில் பரவிய கரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளில் 49 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் 61 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர்.
சனிக்கிழமை நள்ளிரவு நிலவரப்படி, புதிததாக வடகிழக்கு மாகாணமான ஜிலினில் 956 பேருக்கும், ஷாங்காயில் 438 பேருக்கும் மற்றும் ஜெஜியாங்கில் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிற நாடுகளில் சீனா வந்தவர்களில் 51 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் 2,468 பேர் தொற்று பாதிப்பில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 26,167 ஆக உள்ளது, இதில் 57 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை மற்றும் இறப்பு எண்ணிக்கை 4,638 ஆகவே நீடிக்கிறது.