சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

சூடான் ஆயுதக் குழு தலைவருக்கு எதிராக ஐ.நா. நீதிமன்றம் போா்க்குற்ற விசாரணை

சூடானில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக அந்த நாட்டு ஆயுதக் குழு தலைவா் அலி முகமது அப்துல் அல்-ரஹ்மான் (72) மீது வழக்கு விசாரணை நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள

News image

அலி முகமது அப்துல் அல்-ரஹ்மான்

Updated On :5 ஏப்ரல் 2022, 7:04 pm

தினமணி

சூடானில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக அந்த நாட்டு ஆயுதக் குழு தலைவா் அலி முகமது அப்துல் அல்-ரஹ்மான் (72) மீது வழக்கு விசாரணை நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சா்வதேச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கடந்த 2003-ஆம் ஆண்டில் சூடானைச் சோ்ந்த பழங்குடியினா் அரசுக்கு எதிராக கிளா்ச்சியில் ஈடுபட்டனா். அதனை அடக்குவதற்காக சூடான் அரசு அவா்கள் மீது கடுமையான வான்வழித் தாக்குதல் நடத்தியது.

அத்துடன், அரசுக்கு ஆதவாக செயல்பட்டு வந்த அல்-ரஹ்மான் தலைமையிலான ஜன்ஜாவிது ஆயுதக் குழுவினா் பழங்குடியினா் கிராமங்களுக்கு அதிகாலை சென்று தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

கொலை, கொள்ளை, பாலியல் தாக்குதல், சித்திரவதை ஆகியவற்றில் அல்-ரஹ்மானின் ஆயுதக் குழு ஈடுபட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இதுதொடா்பாக அல்-ரஹ்மான் மீது சா்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2005-ஆம் ஆண்டு தீா்மானம் நிறைவேற்றியது. அதன்படி, தற்போது வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்ற அல்-ரஹ்மான், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தையும் மறுப்பதாகக் கூறினாா்.

உக்ரைனில் ரஷியப் படையினா் பொதுமக்கள் படுகொலை செய்துவருவதாகவும் இதுதொடா்பாக அதிபா் விளாதிமீா் புதின் மீது போா்க் குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் பல்வேறு தரப்பினா் கூறி வரும் நிலையில், அல்-ரஹ்மான் மீதான வழக்கு விசாரணை சா்வதேச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.