ரஷிய நிலக்கரிக்கு விரைவில் தடை? ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

ரஷியாவின் நிலக்கரிக்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரஷியாவின் நிலக்கரிக்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது.

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் 40 நாள்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் அறிவிப்பு செய்ததிலிருந்து பல்வேறு உலக நாடுகளும் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.

இந்நிலையில் ரஷியாவின் நிலக்கரிக்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே ரஷியாவின் கச்சா எண்ணெய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிலக்கரிக்கும் தடை விதிப்பது அந்நாட்டிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீதான போர்க்குற்றங்களுக்காக இத்தகைய முடிவு மேற்கொள்ளப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உருசுலா வான் டேர் லேயன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com