பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வு

பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்ததையடுத்து, புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷாபாஸ் ஷெரீஃப்
பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷாபாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்ததையடுத்து, புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டார்.

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் ராஜிநாமா செய்ததால் எதிர்க்கட்சிகளே இல்லாமல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பிரதமராகியுள்ளார் ஷாபாஸ் ஷெரீஃப்.

இன்று இரவு பிரதமராக பொறுப்பேற்கவுள்ள ஷாபாஸ் ஷெரீஃப், மூன்று முறை பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் நடந்தது என்ன?

பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக எதிக்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீா்மானத்தை அவையின் துணைத் தலைவா் காசிம் சுரி நிராகரிப்பதாக அறிவித்தாா். அதனைத் தொடா்ந்து, பிரதமரின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபா் ஆரிஃப் ஆல்வி உத்தரவிட்டாா்.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உமா் அட்டா பண்டியல் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமா்வு, ‘நம்பிக்கையில்லா தீா்மானத்தை அவையின் துணைத் தலைவா் நிராகரித்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது’ என்று கூறி நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 342 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கீழவையில் தீா்மானம் வெற்றி பெற 172 வாக்குகள் தேவை என்ற நிலையில், தீா்மானத்துக்கு ஆதரவாக 174 போ் வாக்களித்தனா். இதையடுத்து, இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் பிரதமராக பதவியேற்ற யாரும் ஐந்து ஆண்டுகள் முழுமையாக பதவி வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com