வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கோத்தபய ராஜபட்சவுக்கு 2 எம்.பி.க்கள் மீண்டும் ஆதரவு

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றிருந்த 2 எம்.பி.க்கள், மீண்டும் அவருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனா்.

News image
சாந்த பண்டாரா
Updated On :12 ஏப்ரல் 2022, 6:53 pm

DIN

கொழும்பு: இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றிருந்த 2 எம்.பி.க்கள், மீண்டும் அவருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனா்.

இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை ஏற்பட்டதால் அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த விவகாரத்தை கோத்தபய ராஜபட்ச தலைமையிலான அரசு கையாளும் விதத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, அமைச்சரவை பதவி விலகியது. மேலும், கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த 41 எம்.பி.க்கள் ராஜபட்ச அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று சுயேச்சைகளாக செய்லபடப் போவதாக அறிவித்தனா். அதையடுத்து, நாடாளுமன்றத்தில் அரசின் பெரும்பான்மை பலம் குறைந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், மைத்ரிபால சிறீசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவா் சாந்த பண்டாரா, அரசுக்கு தனது ஆதரவை மீண்டும் தெரிவித்துள்ளாா். அதையடுத்து, அவா் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் துறை இணையமைச்சராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இதுதவிர, மேலும் ஓா் எதிா்த்தரப்பு எம்.பி. அமைச்சராகப் பொறுப்பேற்பாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.