திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

ரஷிய படைகளை திணறடித்து கம்பீரமாக நிற்கும் மரியுபோல் துறைமுகம்

மரியுபோல் துறைமுகம், கம்பீரமாக நின்றுகொண்டிருப்பது, கிரெம்லினின் போர் யுக்திகளை எல்லாம் எதிர்கொண்ட உக்ரைனின் எதிர்ப்பாற்றலை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. 

News image

ரஷிய படைகளை திணறடித்து கம்பீரமாக நிற்கும் மரியுபோல் துறைமுகம்

Updated On :15 ஏப்ரல் 2022, 11:10 am


லிவீவ்: ரஷிய படைகளின் கடும் தாக்குதல், தொடர் குண்டுவெடிப்புகளையும் தாண்டி, மரியுபோல் துறைமுகம், கம்பீரமாக நின்றுகொண்டிருப்பது, கிரெம்லினின் போர் யுக்திகளை எல்லாம் எதிர்கொண்ட உக்ரைனின் எதிர்ப்பாற்றலை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்கி 6 வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், மிகப்பெரிய பாதுகாப்புப் படையைக் கொண்டிருக்கும் ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் படைகள் இன்னமும் தொடர்ந்து எதிர்த்தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன. 

ரஷியாவின் போர் யுக்தி, படைப் பலம் என எல்லாவற்றையும் எதிர்கொண்டு வருகிறது உக்ரைன் படைகள். பிப்ரவரி 24ஆம் தேதி ரஷியா தொடங்கிய இந்தப் போரின் முக்கியக் குறியாக இருந்தது என்னவோ மரியுபோல்தான்.

உக்ரைனின் மிகப்பெரிய துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றுவதே போரின் முக்கிய வெற்றியாகக் கருதப்பட்ட நிலையில், இத்தனை தாக்குதலையும் தாண்டி மரியுபோல் துறைமுகம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.

ஆனால், மரியுபோல் நகரம் முழுக்க உக்ரைன் படை வீரர்கள் தடுப்புச்சுவர் போல் நின்று, ரஷிய படைகளை சிதறடித்துக் கொண்டிருக்கின்றன. உக்ரைனின் தடுப்பாற்றலை வெளிப்படுத்தும் போர்ச் சின்னமாக மரியுபோல் துறைமுகம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.