ரஷியா - உக்ரைன் போர் எதிரொலி காரணமாக உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 3.6 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளின் பொருளாதாரமும் போரின் எதிரொலியாக சரிவைச் சந்தித்து வருகின்றன. உலக அளவில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்களில் விலை அதிகரித்து வருவதற்கும் உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதலே காரனம் என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இந்த கருத்துக்களை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர், பியரி ஆலிவியர், உக்ரைன் - ரஷியா இடையிலான போர், உலக அளவில் பொருளாதரத்தில் ஏற்படுள்ள இறக்கத்திற்கும், பணவீக்கத்திற்கும் காரணமாகியுள்ளது. அரையாண்டுக்கான உலக பொருளாதார அவுட்லுக் தரவுகளும் கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைனில் ரஷியப் படைகள் தாக்குதல் நடத்த நுழைந்ததே காரணம் என்று தெரிவித்துள்ளதையும் குறிப்பிட்டார்.
கரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியிலிருந்து உலக நாடுகள் மீண்டும் வந்துகொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் போர் கடும் பொருளாதார சரிவை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.