47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

'கடைசி நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்' - உதவி கோரும் உக்ரைன் வீரர்கள்!

தங்கள் கடைசி நாள்களை எண்ணிக்கொண்டிருப்பதாக மரியுபோலில் உள்ள உக்ரைன் வீரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

News image
Updated On :20 ஏப்ரல் 2022, 8:22 am

DIN

தங்கள் கடைசி நாள்களை எண்ணிக்கொண்டிருப்பதாக மரியுபோலில் உள்ள உக்ரைன் வீரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இரண்டு மாதத்தை எட்டியுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை படிப்படியாகத் தாக்கி அழித்து வருகிறது ரஷியா. 

மிகப்பெரிய துறைமுக நகரமான மரியுபோல் நகரை ஏறக்குறைய முழுவதுமாக ரஷியப்படை கைப்பற்றியுள்ளது. அங்குள்ள மிகப்பெரிய எஃகு ஆலையைக் கைப்பற்ற போராடி வரும் நிலையில் உக்ரைன் வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். 

உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கொடுத்துவிட்டு சரணடைய வேண்டும் என்று ரஷியா ஒருமுறை எச்சரிக்கை விடுத்தும் சரணடைய மாட்டோம் என்றும் தங்களால் முடிந்தவரை போராடுவோம் என்றும் உக்ரைன் வீரர்கள் தெரிவித்தனர். 

Story image

மரியுபோல் எஃகு ஆலைக்கு அடியில் சுமார் 1,000 மக்களும் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், மரியுபோலில் உள்ள உக்ரைன் வீரர்கள் சரணடைய வேண்டும் என்றும் இல்லையெனில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் மீண்டும் ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, தங்களுடைய கடைசி நாள்களை எண்ணிக்கொண்டிருப்பதாக உக்ரைன் வீரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

முன்னதாக, மரியுபோலில் சிக்கியுள்ள மக்களை மனிதாபிமான அடிப்படையில் மீட்க அனுமதிக்க வேண்டும் என ரஷியாவுக்கு ஐ.நா. மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.