ஷாங்காயில் கரோனாவுக்கு 36 பேர் பலி: ஏப்.26 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கடந்த சில வாரங்களாக தீவிர கரோனா பரவலைக் கண்டு வரும் சீனாவின் வா்த்தக மையமான ஷாங்காய் நகரில், மேலும், ஏப்ரல் 26 வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது. 
shanghai072628
shanghai072628
Published on
Updated on
1 min read

கடந்த சில வாரங்களாக தீவிர கரோனா பரவலைக் கண்டு வரும் சீனாவின் வா்த்தக மையமான ஷாங்காய் நகரில், மேலும், ஏப்ரல் 26 வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது. 

இதுதொடர்பாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளதாவது,

இதுதவிர, வேகமாகப் பரவும் ஒமைக்ரான் வகை கரோனா, கடந்த 24 மணி நேரத்தில் 2,119 பேருக்கு தொற்று பரவியுள்ளது. அவற்றில் ஷாங்காயில் 1,931 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து நாட்டில் இதுவரை ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 4,43,500 ஆக உள்ளது. 

நோய்த் தொற்றுக்கு இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர். ஷாங்காயில் மட்டும் 11 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4,674 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கரோனா பாதித்த 30,813 பேர் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையடுத்து, ஷாங்காய் நகரம் முழுவதும் ஏப்ரல் 26 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும், துணைப் பிரதமர் சன் சுன்லன் கூறியதாவது, 

நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நோய்த்தொற்றின் அபாயத்தைப் பொறுத்து கூடுதல் சோதனைகள் நடத்தப்படும். கரோனா தொற்றை ஒழிப்பதற்கான முயற்சிகள் அனைத்தும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். கரோனா பூஜ்ஜியமாகும் வரை, நாம் தொடர்ந்து வேகத்துடன் செயல்படவேண்டும் என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com