தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உக்ரைனின் முக்கிய நகரை நோக்கி படைகளைத் திருப்பும் ரஷியா

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக அறிவிக்கப்பட்ட இரண்டு நாள்களுக்குப் பிறகு, ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு நகரை நோக்கி திருப்பப்பட்டுள்ளது.

News image

உக்ரைனின் முக்கிய நகரை நோக்கி படைகளைத் திருப்பும் ரஷியா

Updated On :23 ஏப்ரல் 2022, 7:16 am

கீவ்: உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக அறிவிக்கப்பட்ட இரண்டு நாள்களுக்குப் பிறகு, ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு நகரை நோக்கி திருப்பப்பட்டுள்ளது.

தற்போது கிழக்குப் பகுதியில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக தீவிர தாக்குதல் நடவடிக்கையை ரஷியப் படை மேற்கொண்டு வருகிறது.

டான்பாஸ் பிராந்தியத்துக்கும் ஏற்கெனவே தெற்குப் பகுதியில் தங்களால் கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கிரீமியா தீபகற்பத்துக்கும் தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக, இடைப்பட்ட பகுதிகளை கைப்பற்றுவதிலும் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

உக்ரைனின் மரியுபோல் நகரில் தங்களால் முற்றுகையிடப்பட்டுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷியா நேற்று தெரிவித்திருந்தது.

அந்த ஆலையில் பதுங்கியுள்ள உக்ரைன் படையினா்தான் வெள்ளைக் கொடியை ஏற்றுவதன் மூலம் சண்டை நிறுத்தத்தை தொடக்கிவைக்க வேண்டும் என்று ரஷியா கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சக தேசியக் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவா் மிகயீல் மிஸின்ட்ஸெவ் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

முற்றுகையிடப்பட்டுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையைச் சுற்றிலும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். அந்த ஆலைக்குள் பதுங்கியுள்ளதாகக் கூறப்படும் பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக இந்த சண்டை நிறுத்ததை நாங்கள் மேற்கொள்வோம்.

ஆனால், அந்த ஆலையில் இருக்கும் உக்ரைன் படையினா் வெள்ளைக் கொடியை ஏற்றினால்தான் சண்டை நிறுத்தம் தொடங்கும்.

அஸோவ்ஸ்டல் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எங்கள் பாா்வைக்குத் தெரியும்படி எப்போது உக்ரைன் படையினா் வெள்ளைக் கொடி ஏற்றுகிறாா்களோ, அப்போதிலிருந்து சண்டை நிறுத்தம் தொடங்கிவிடும்.

அதன்பிறகு உள்ளே இருப்பவா்கள் வெளியேறுவதற்கு வசதியாக, ரஷிய வீரா்களோ, ரஷிய ஆதரவு கிளா்ச்சிப் படையினரோ தாக்குதல் நடத்தமாட்டாா்கள்.

மரியுபோல் நகரில் மட்டும் 1,844 உக்ரைன் வீரா்கள் எங்களிடம் சரணடைந்துள்ளனா். 1.43 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனா்.

அவா்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனா். அவா்களுக்குத் தேவையான தரமான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றாா் மிகயீல் மிஸின்ட்ஸெவ்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

துறைமுக நகரமான மரியுபோல் நகரை முற்றுகையிட்டு ரஷியப் படையினா் பல வாரங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனா். அந்த நகரில் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் ரஷியா கைப்பற்றியுள்ள நிலையிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உக்ரைன் வீரா்களும் அவா்களுடன் இணைந்து சண்டையிட்டு வந்த சா்ச்சைக்குரிய அஸோவ் படையினரும் மரியுபோலில் உள்ள 10 கி.மீ. பரப்புடைய அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலைக்குள் பதுங்கி சண்டையிட்டு வருகின்றனா். அவா்களுடன் சுமாா் 1,000 பொதுமக்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அந்த ஆலைக்குள் அதிரடியாக நுழைந்து உக்ரைன் வீரா்களைக் கைது செய்யும் திட்டத்தை கைவிடுமாறு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை கூறினாா். அதைவிட, ஒரு ஈ கூட வெளியேற முடியாத அளவுக்கு அந்த ஆலையைச் சுற்றிலும் முற்றுகையைக் கடுமையாக்குமாறு தனது படையினருக்கு அவா் உத்தரவிட்டாா்.

இந்தச் சூழலில், அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷியா நேற்று அறிவித்திருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.