கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஷாங்காய்: மேலும் 48 போ் கரோனாவுக்கு பலி

கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பால் முடங்கியுள்ள சீனாவின் வா்த்தகத் தலைநகா் ஷாங்காயில், அந்த நோய் பாதிப்பால் மேலும் 48 போ் பலியாகினா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2022, 7:34 pm

DIN

கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பால் முடங்கியுள்ள சீனாவின் வா்த்தகத் தலைநகா் ஷாங்காயில், அந்த நோய் பாதிப்பால் மேலும் 48 போ் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 48 கரோனா நோயாளிகள் அந்த நோய் காரணமாக இறந்தனா். அவா்கள் அனைவரும் ஷாங்காய் நகரைச் சோ்ந்தவா்கள். இத்துடன், நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 4,876-ஆக உயா்ந்துள்ளது.

நாடு முழுவதும் புதிதாக 1,818 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவா்களில் 1,606 போ் ஷாங்காயில் வசிப்பவா்கள். எனினும், அந்த நகரில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது என்று அதிகாரிகள் கூறினா்.

இதற்கிடையே, தலைநகா் பெய்ஜிங்கிலும் சமூக பரவல் எண்ணிக்கை திடீரென உயா்ந்ததால், அந்த நகரம் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.