போலந்து, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் இரண்டு மாதங்களைக் கடந்துள்ளது. பிற நாடுகளின் ராணுவ உதவியினால் உக்ரைனும் ரஷியாவுக்கு எதிராகப் போராடி வருகிறது.
உக்ரைன் ஆதரவு நாடுகள் ரஷியாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது.
ரஷியாவுடன் நட்பில் இல்லாத நாடுகளுக்கு சமையல் எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்படும் என்று ரஷிய நாடாளுமன்ற கீழவைத் தலைவர் கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளித்ததால் போலந்து, பல்கேரியா மீது ரஷியா இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் இரு நாடுகளும் ரஷியாவின் நாணயமான ரூபிளில் பணம் செலுத்தாததால் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


