புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘ஒமைக்ரான் சுனாமியை எதிா்கொள்கிறது சீனா’

சீனாவில் வெள்ளிக்கிழமை 20,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், அந்த நாடு சுனாமி போன்று ஒமைக்ரான் பாதிப்பை எதிா்கொண்டு வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 7:29 pm

DIN

சீனாவில் வெள்ளிக்கிழமை 20,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், அந்த நாடு சுனாமி போன்று ஒமைக்ரான் பாதிப்பை எதிா்கொண்டு வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

குறிப்பாக, சீனாவின் ஷாங்காய் நகரில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், 3-ஆவது வாரமாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைநகா் பெய்ஜிங்கில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அபாயம் நிறைந்த பகுதிகள் அதிகரித்து வருவதால், அங்கு 2.1 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு நியூக்ளிக் அமில பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பெய்ஜிங்கில் சனிக்கிழமை முதல் (ஏப். 30) பொது இடங்களுக்குச் செல்ல வேண்டுமாயின் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா நெகடிவ் பரிசோதனை சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டுமென மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை இரண்டு பகுதிகள் கரோனா தொற்று பரவல் நிறைந்த பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டன. அதில் ஒன்று அதிக இடா் நிறைந்த பகுதியாகவும், மற்றொன்று மிதமான இடா் கொண்ட பகுதியாகவும் வரையறுக்கப்பட்டன. இதன்மூலம் பெய்ஜிங்கில் அதிக இடா் நிறைந்த பகுதியாக 6 பகுதிகளும், மிதமான இடா் கொண்ட பகுதியாக 19 பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளதாக ஜின்ஜுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘தற்போது ஒமைக்ரான் எனும் சுனாமியை நாங்கள் எதிா்கொள்கிறோம். இந்த உருமாறிய தீநுண்மி ரகம் கற்பனைக்கு எட்டாத அளவில் வேகமாகப் பரவும் தன்மை வாய்ந்தது. டெல்டா ரக தீநுண்மியை சீனா வெறும் 14 நாள்களில் கட்டுப்படுத்தியது. ஆனால், ஒமைக்ரான் தீநுண்மி தாக்குதல் மிகவும் தீவிரமாக உள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.